டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவலம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
இந்த நிலையில் கடந்த 7–ந் தேதி திடீரென திருவலம் இ.பி.கூட்ரோடு அருகே டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் அந்த கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவலம் போலீசார் அங்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், ‘‘டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பள்ளி உள்ளது. மேலும் இந்த சாலை வழியாகத்தான் ராமநாதபுரம், கொடுக்கந்தாங்கல், விண்ணம்பள்ளி, குப்பிரெட்டித்தாங்கல், இளையநல்லூர், இ.பி.குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியும். இதே வழியாகத்தான் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மதுபானக்கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story