கட்டுடல் அழகி மமோதா தேவி


கட்டுடல் அழகி மமோதா தேவி
x
தினத்தந்தி 10 Sept 2017 12:33 PM IST (Updated: 10 Sept 2017 12:33 PM IST)
t-max-icont-min-icon

கட்டுடலை வெளிக்காட்டும் ‘பாடி பில்டிங்’ போட்டியில் ஆண்களுக்கு இணையாக தனது உடல்வாகை மெருகேற்றி அசத்தி கொண்டிருக்கிறார், மமோதா தேவி யோம்னம்.

ட்டுடலை வெளிக்காட்டும் ‘பாடி பில்டிங்’ போட்டியில் ஆண்களுக்கு இணையாக தனது உடல்வாகை மெருகேற்றி அசத்தி கொண்டிருக்கிறார், மமோதா தேவி யோம்னம். உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த போட்டியில் பெண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் தனது கட்டுடல் தோற்றத்தை வெளிப்படுத்தி வெண்கலப்பதக்கம் வென்றிருக் கிறார். அதன் மூலம் மிஸ்டர் ஆசியா பட்டத்தை பெற்றிருக் கிறார். அத்துடன் சர்வதேச அளவிலான கட்டுடல் உடல்வாகுக்கான ‘பாடி பில்டிங்’ போட்டியில் விருதுகளை வென்ற முதல் பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார். இவருடைய கணவர் போரன் யாம்னமும் கட்டுமஸ்தான உடல்வாகுக்கு சொந்தக்காரர். தன்னுடைய உடல் பாகங்களை மிரளவைத்து மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் ஆசியா போன்ற பட்டங்களை வென்றவர். இதையடுத்து மிஸ்டர் ஆசியா பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனையும் படைத்திருக்கிறார்கள்.

இருவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள். தற்போது டெல்லியில் வசிக்கிறார்கள். மமோதா 2011-ம் ஆண்டு கணவருடன் சேர்ந்து ‘பாடி பில்டிங்’ பயிற்சியை பெற தொடங்கி இருக் கிறார். தொடக்கத்தில் தசைப்பகுதிகளை வலுப்படுத்துவதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். கடுமையான உணவு பழக்க வழக்கங்களையும் பின்பற்றி வந்திருக்கிறார். கட்டுடலுக்கு தன்னை தயார் படுத்துவதற்கு முன்பு தான் அழகாக இருந்ததாகவும், இப்போது தசைகள் மெருகேறி உடலமைப்பு மாறி விட்டதையும், அழகுக்காக ஒப்பனை செய்வதையே நிறுத்தி விட்டதையும் நினைவு கூரு கிறார். உடல்வாகுவில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து மற்றவர்கள் விமர்சிப்பார்களோ என்ற தயக்கத்தில் வெளி இடங் களுக்கு செல்வதையும் ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். போட்டியில் பங்கேற்க தொடங்கிய பிறகு மக்களிடையே கிடைத்த வரவேற்பு கூச்ச சுபாவத்தை விலக்கி இருக்கிறது. மூன்று குழந்தைகளுக்கு தாயான மமோதா, கட்டுடல் அழகை பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் மமோதா பெண்கள் தைரியமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

Next Story