நீல திமிங்கலம் விளையாட்டு: பெற்றோர்கள் விழிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்


நீல திமிங்கலம் விளையாட்டு: பெற்றோர்கள் விழிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Sept 2017 3:45 AM IST (Updated: 11 Sept 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– நீல திமிங்கல விளையாட்டு மிகவும் அபாயகரமானது. இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நீல திமிங்கல விளையாட்டு மிகவும் அபாயகரமானது. இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியற்ற மன நிலையில் இருப்பார்கள். கோபத்தை தன் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ திடீரென வெளிப்படுத்துவார்கள். இணைய தளத்தில் அதிக நேரம் செலவிடுவார்கள். தேவையற்ற காயங்களை உடலில் ஏற்படுத்தி கொள்வார்கள். இப்படி குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை உடனடியாக நீல திமிங்கல விளையாட்டிலிருந்து மீட்க வேண்டும்.

எனவே உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய நீல திமிங்கலம் விளையாட்டில் இருந்து குழந்தைகளை, பெற்றோர்கள் விழிப்புடன் கண்காணித்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பாக உதவி எதுவும் தேவைப்பட்டால் 8300087700 என்ற செல்போன்எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story