வெள்ளை நோய் தாக்குதலால் கரும்பு பயிர் வளர்ச்சி பாதிப்பு விவசாயிகள் கவலை


வெள்ளை நோய் தாக்குதலால் கரும்பு பயிர் வளர்ச்சி பாதிப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 10 Sep 2017 10:45 PM GMT (Updated: 10 Sep 2017 9:04 PM GMT)

வாணாபுரம், தண்டராம்பட்டு பகுதிகளில் கரும்பு பயிர்களை வெள்ளை நோய் தாக்குவதால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் அகரம்பள்ளிப்பட்டு, பெருந்துறைப்பட்டு, கொட்டையூர், ராயண்டபுரம், வாழவச்சனூர், அந்தோணியார்புரம், காம்பட்டு, குங்கிலியநத்தம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, தென்கரும்பலூர், ராதாபுரம், காம்ப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு முக்கிய பயிராக உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வளர்ந்துள்ள கரும்பு பயிரை வெள்ளை நோய் தாக்கப்படுவதினால் கரும்பு பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் இருந்து வருகின்றது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “தற்போது கரும்பு நடப்பட்டு 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் வளரும்போது வெள்ளையாக மாறுகிறது. மேலும் கரும்புப்பயிர்கள் வளர்ச்சி குறைவாக இருந்து வருகின்றது.

கரும்பு சிறியதாக இருப்பதால் ஆலைக்கு வெட்டும் போது எடை குறைவாகவே இருந்து வருகின்றது. எனவே, வாணாபுரம் மற்றும் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளைநோய் தாக்கிய கரும்பு வயல்களை சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார். 

Related Tags :
Next Story