அம்மா பூங்கா அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் ஆய்வு


அம்மா பூங்கா அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Sep 2017 10:45 PM GMT (Updated: 10 Sep 2017 9:04 PM GMT)

தாந்தோணி மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளில் அம்மா பூங்கா அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் கருப்பம்பாளையத்திலும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நாகம்பள்ளியிலும் அம்மா பூங்கா அமைப்பதற்கான இடங்களை கலெக் டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

மாயனூரில் இயற்கை எழிலோடு அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேபோல கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்டமங்கலத்திலும், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியிலும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டாங்கோவில் கிழக்கு, காக்காவாடி, கருப்பம்பாளையம், புத்தாம்பூர் ஆகிய ஊராட்சிகளிலும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் வதியம் ஊராட்சியிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் போத்துராவுத்தன்பட்டியிலும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் தோகைமலை, கூடலூர், கழுகூர் ஆகிய ஊராட்சிகளிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடவூர், பண்ணப்பட்டி, பாலவிடுதி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளிலும் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

கருப்பம்பாளையத்திலும், நாகம்பள்ளியிலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டி இயற்கை அழகோடு குன்றுகள் மற்றும் ஆற்றோரம் அம்மா பூங்கா அமைப்பதற்காக இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இடம் முடிவான பின்னர் பணிகள் தொடங்கி விரைவில் முடிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளை சேர்ந்த கிராமத்தினர், தேசிய நெடுஞ்சாலையில் பயணம்செய்வோர் என ஏராளமானோர் பயனடைய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, தாசில்தார்கள் சந்திரசேகரன், ராம்குமார், நில அளவையர் புவனேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story