மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்


மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:15 AM IST (Updated: 11 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்

ஓசூர்,

பாகலூர் அருகே உள்ள சேனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது 26). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இருதயம், கண்கள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது பெற்றோர் முன் வந்தனர்.இதையடுத்து விஸ்வநாத்தின் பெற்றோரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ததற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது கலெக்டர் கதிரவன், அசோக்குமார் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறியதாவது:-

சேனமங்கலத்தைச் சேர்ந்த விஸ்வநாத் அத்திப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மூக்கண்டப்பள்ளியில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் அவரது உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்க முன் வந்துள்ளனர். தன் மகனை இழந்த நிலையில் மற்றவர்களின் உயிர் காக்கும் நோக்கத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய அவரது குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story