முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித் தனர்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் செடில் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கடந்த 31-ந்தேதி காலை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளும், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு யாக பூஜைகளும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி விழா நாட்களில் அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் மயில் வாகனத்திலும், சாரதி அலங்காரத்தில் குதிரை வாகனத்திலும், காமாட்சி அலங்காரத்தில் யானை வாகனத்திலும், காளி அலங்காரத்தில் சிம்ம வாகனத்திலும், பார்வதி அலங்காரத்தில் பெரிய ரிஷப வாகனத்திலும், துர்க்கை அலங்காரத்தில் பூத வாகனத்திலும் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு பக்தர்கள் காவடி, பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. அதைதொடர்ந்து மாலை 3.30 மணிக்கு செடில் உற்சவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் பூதவாகனத்தில் வீதியுலாவும், மஞ்சள்நீர் விளையாட்டும் நடக்கிறது. பின்னர் 12.30 மணிக்கு வங்கக்கடலில் தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், 2 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12-ந்தேதி அஸ்திரஹோம பரிகார பூஜையும், 17-ந்தேதி உதிர்வாய் துடைப்பு, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, பொன்னூஞ்சல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Related Tags :
Next Story