கட்டுமான கழகத்தில் அதிகாரி வேலை


கட்டுமான கழகத்தில் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 11 Sep 2017 12:30 PM GMT (Updated: 11 Sep 2017 8:14 AM GMT)

தேசிய கட்டுமான கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.சி. என அழைக்கப்படுகிறது.

 தற்போது இந்த நிறுவனத்தில் பொது மேலாளர்(நிதி), கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், திட்ட மேலாளர், முதுநிலை திட்ட அதிகாரி, உதவி மேலாளர், இளநிலை என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 94 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ., எம்.பி.ஏ., முதுநிலை இந்தி-ஆங்கிலம், சிவில், எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன.

அதிகபட்சம் 49 வயதுடையவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுவதால் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

குழு கலந்துரையாடல், தனிநபர் நேர் காணல், எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24-9-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nbccindia.com. என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Next Story