தமிழக அரசு துறை பணிகள்


தமிழக அரசு துறை பணிகள்
x
தினத்தந்தி 11 Sep 2017 8:23 AM GMT (Updated: 11 Sep 2017 8:22 AM GMT)

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தற்போது குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்கு 54 இடங்களும், மற்றொரு அறிவிப்பின்படி மருத்துவ கல்வித் துறையில் 31 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில் (சட்டம் மற்றும் நிதி) பிரிவில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பிட்ட பணி அனுபவம் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26-9-2017-ந் தேதியாகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைப் பெண்கள் தேர்வுக் கட்டணம் ரூ.100 தவிர்த்து வெறும் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மற்றொரு அறிவிப்பின்படி மருத்துவ கல்வித்துறையில் புள்ளியியலாளர் பணிக்கு 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுடையவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. புள்ளியியல் பாடத்தை முதன்மை பாடமாகவும், கணிதவியல், பொருளாதாரத்தை துணை பாடமாகவும் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-10-2017-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 26-11-2017-ந் தேதி நடத்தப்படுகிறது. இவை பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in/ www.tnpscexams.net/ www.tnpscexams.in ஆகிய இணையதள பக்கங்களில் பார்க்கலாம்.

Next Story