அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்


அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:45 AM IST (Updated: 12 Sept 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

செந்துறை,

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

சினிமா இயக்குனர்கள் பலர் நேரில் சென்று அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். சென்னையில் இரங்கல் கூட்டமும் நடத்தினார்கள். இந்தநிலையில் நடிகர் விஜய் நேற்று அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அனிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அனிதாவின் தந்தை சண்முகத்துடன் தரையில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறினார். அனிதாவின் சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார்.


Related Tags :
Next Story