ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நீடிப்பு
குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது.
நாகர்கோவில்,
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கு முன்னதாக 20 சதவீத இடைக்கால நிவாரணம் 1–1–2016 முதல் உடனடியாக அறிவிக்க கோரியும் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குழுவான ஜாக்டோ–ஜியோ சார்பில் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 7–ந்தேதி தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் முதல் நாளன்று 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கிடையே வேலை நிறுத்தத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனாலும் போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை. அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் கடந்த 8–ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர். இதன் காரணமாக நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்ட வழங்கல் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு அரசு பணிகள் முடங்கியுள்ளன. இதுபோல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ–மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வேலை நிறுத்தத்தையொட்டி ஜாக்டோ–ஜியோ சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பகவதியப்பபிள்ளைஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் , வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் மூர்த்தி மற்றும் லீடன்ஸ்டோன், கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story