நாமக்கல்லில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வரும் நிலையில் நேற்று நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருபிரிவினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்றும் நீடித்தது. இதையொட்டி 585 ஆசிரியர்கள் மற்றும் 685 அரசு ஊழியர்கள் என மொத்தம் 1,270 பேர் வேலைக்கு வரவில்லை. ஆனால் வழக்கமான பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருக.செல்வராசன், தலநிதி தணிக்கைத்துறை மாநில தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் சரவணமுத்து உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.

முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.


Next Story