பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி பூதலூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பூதலூர் அருகே உள்ள காங்கேயன்பட்டி, அய்யனாபுரம், நந்தவனப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று பயிர்க்காப்பீட்டு தொகை பெறுவதற்காக நேற்று பூதலூர் கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனர்.

ஆனால் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். 

Related Tags :
Next Story