நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் அனைத்து கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், நீட் தேர்வுக்காக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் தஞ்சை கீழராஜவீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். தமிழ்ப்பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் சீமான்இளையராஜா, ஜான்வின்சென்ட், சட்டக்கல்லூரி மாணவி இமயா, மருத்துவகல்லூரி மாணவர் பாரதி உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனநாயக விரோத செயல்
2-வது நாள் போராட்டத்தை வக்கீல் தஞ்சை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, செயலாளர் செல்வராஜ், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், தஞ்சை மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இது குறித்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாணவர் இயக்க பொதுச்செயலாளர் பிரபாகரன் கூறுகையில், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க, அமைதியான முறையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 2-வது நாளாக நாங்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மாணவர்களை திருப்பி அனுப்பியது ஜனநாயக விரோத செயல் ஆகும்”என்றார்.
ஆர்ப்பாட்டம்
இதே போல் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை ஏழுப்பட்டியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மறியல் செய்வதற்காக வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள், சுவாமி விவேகானந்தா கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Related Tags :
Next Story