ஏரியில் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ரோகிணியிடம் விவசாயிகள் மனு
பனமரத்துப்பட்டி ஏரியில் வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரி கலெக்டர் ரோகிணியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை வாங்கினார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கவேல் (வயது 34) என்பவர் மனு கொடுத்தார். அதில், எனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு, கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை மனு கொடுத்து உள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு 3 சக்கர வாகனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வண்டல் மண்
பனமரத்துப்பட்டி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர். அதில், பனமரத்துப்பட்டி ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவசாயிகள் வண்டல் மண் அள்ளி வந்தனர். இதனிடையே ஒருவர் தொடுத்த வழக்கினை தொடர்ந்து ஏரியில் மண் அள்ள தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரியில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஓமியோபதி மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் ரஜினிகாந்த் கொடுத்துள்ள மனுவில், ஓமியோபதி மருத்துவ பட்டம் பெற்று தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். இதையடுத்து கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்து வருகிறோம். இந்த ஓமியோபதி பட்டம் பெற்றவர்களை போலி மருத்துவர்கள் போல் விசாரணை என்ற பெயரில் இடையூறு செய்வதாலும், காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துவதாலும் மருத்துவ சேவை பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார்
சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவர் கொடுத்த மனுவில், தொழில் தொடர்பாக எங்கள் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மூலம் கடன் பெற விண்ணப்பித்தேன். இதையடுத்து கடன் தொகையை எனக்கு தெரியாமல் கடந்த 2016-ம் ஆண்டு அவர் பெற்றுக்கொண்டார். ஆனால் வங்கியில் இருந்து பணம் கட்டுமாறு தற்போது எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. எனவே பணமோசடி செய்த அந்த அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாநகர, மாவட்ட செயலாளர் லோகநாதன் கொடுத்துள்ள மனுவில், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த மணிகேலை (38) என்பவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் ரோகிணி கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Tags :
Next Story