நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:15 AM IST (Updated: 13 Sept 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி நேற்று புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை,

நீட் தேர்வில் இருந்துதமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், அனிதாவின் தற்கொலைக்கு நீதிகேட்டும் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்யப்பட்டு உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் பட்டது.

இதற்கு அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்ல முத்து முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கணேஷ்நகர் போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 15 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை தாங்கினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், அனிதாவின் தற்கொலைக்கு நீதிகேட்டும் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story