மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடை கட்டிட பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் அருந்ததியர் தெருவில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் அருந்ததியர் தெருவில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அந்த பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அருந்ததியர் தெரு பொதுமக்கள் நேற்று திடீரென ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைக்கான கட்டுமான பணி நடைபெற்ற இடத்துக்கு சென்றனர். அப்போது அவர்கள் திடீரென, டாஸ்மாக் கடை திறந்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, கட்டிட பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார்,
இதுபற்றி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.