மாற்றுப்பாதையை சீரமைக்கக்கோரி தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
வேலூர் அரியூரில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாகவும் மாற்றுப்பாதையை சீரமைத்து தரக்கோரியும் பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு ரெயில் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் அரியூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு வருட காலம் ஆகியும் மந்த நிலையிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் அரியூர், ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பகுதிகளுக்கு பஸ், லாரி மற்றும் வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால் சித்தேரி வழியாக பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று அரியூர் ரெயில்வே கேட் அருகே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரெயிலை மறிக்க முடிவு செய்து திடீரென அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் போராட்டம் குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியூர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதையும் சரியில்லை. ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் காணப்படுகிறது. எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லது எங்களுக்கு மாற்றுப்பாதையை சீரமைத்து எளிதில் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
அவர்களிடம் போலீசார் “இந்த பகுதியில் ரெயில்வே சிக்னல் கிடையாது. ரெயில் வந்தால் பெரும் விபத்து ஏற்படும் எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள். போலீசார் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்” என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story