நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலமங்கலம் அருகே அரசு, பள்ளி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு மாதிரிப்பள்ளி போடிச்சிப்பள்ளி சாலையில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் எதிரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. மாதிரிப்பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் கெலமங்கலம்-உத்தனப்பள்ளி சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி ஆகியோர் அங்கு சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story