மோட்டார் சைக்கிளில் சென்றபோது குழந்தை மீது மோதியவருக்கு அடி–உதை


மோட்டார் சைக்கிளில் சென்றபோது குழந்தை மீது மோதியவருக்கு அடி–உதை
x
தினத்தந்தி 13 Sept 2017 3:30 AM IST (Updated: 13 Sept 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்றபோது குழந்தை மீது மோதியவருக்கு அடி–உதை 2 பேர் கைது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 44). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக கொட்டாமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் புதுச்சத்திரம் பஜனை கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டார்.

 இதை பார்த்த அங்கிருந்த செந்தில்குமார் (39), கோபாலகிருஷ்ணன் (35), ராமகிருஷ்ணன், மீனாட்சி ஆகியோர் தாமோதரனை தகாத வார்த்தையால் பேசி, கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாமோதரன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணன், மீனாட்சியை தேடி வருகின்றனர்.


Next Story