கதிராமங்கலத்தில் 63-வதுநாளாக கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்


கதிராமங்கலத்தில் 63-வதுநாளாக கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2017 4:00 AM IST (Updated: 13 Sept 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் 63-வதுநாளாக கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் மீது தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற கோரியும் கதிராமங்கலத்தில் அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் நேற்று 63-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 250-க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் மற்றும் கலெக்டர் கதிராமங்கலம் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர். 

Related Tags :
Next Story