நாசிக்கை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் மும்பை ஆஸ்பத்திரியில் பிறந்தது


நாசிக்கை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் மும்பை ஆஸ்பத்திரியில் பிறந்தது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஆஸ்பத்திரியில் நாசிக்கை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன.

மும்பை,

மும்பை ஆஸ்பத்திரியில் நாசிக்கை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன.

கர்ப்பிணி

மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் நாஜிம் சேக். இவரது மனைவி ஜாகான்நாகா(வயது29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது வயிற்றில் 4 கருக்கள் வளர்ந்து வருவது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஜாகான்நாகா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று ஜாகான்நாகாவிற்கு பிரசவ வலி உண்டானது. டாக்டர்கள் உடனே அவரை பிரசவத்திற்கு அழைத்து சென்றனர்.

4 குழந்தைகள்

ஜாகான்நாகாவிற்கு சுகபிரசவம் ஆனது. அடுத்தடுத்து அவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் ஒரு குழந்தை ஆண் குழந்தை. மற்ற மூன்றும் பெண் குழந்தைகள் ஆகும். பிரசவத்திற்கு பின் தாய் மற்றும் சேய்கள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜாகான்நாகா ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றதையடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தாய் மற்றும் சேய்களின் உடல்நலன் கருதி டாக்டர்கள் ஒரு மாதம் வரையிலும் ஆஸ்பத்திரியில் இருக்கும்படி அவரை அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story