திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக தேவையான பரிந்துரைகள் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நேரில் ஆய்வு செய்த கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள புறவெளிசாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நோயாளிகள் வருகையை பதிவு செய்யுமிடம், மருந்தகம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளான கழிவறைகள், குடிநீர் குறித்தும் நேரில் பார்வையிட்டார். மேலும் ஒவ்வொரு பிரிவாக சென்று நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும். நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் படுக்கை வசதியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.
தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. அப்போது இந்த மருத்துவமனை கூடுதல் பிரிவுகளுடனும், படுக்கை வசதிகளுடனும் விரிவுபடுத்தப்படும். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 21 நோயாளிகளுக்கு ஆரம்ப நிலையிலான டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அடுத்த 2 நாட்களில் 6 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக தான் உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடிநீர் தேவைக்காக துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வட ஆண்டாப்பட்டு சேரியந்தல் ஏரியில் இருந்து புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் 45 நாட்களுக்குள் விடப்பட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். மாவட்டம் முழுவதும் கொசுத்தொல்லையை ஒழிக்க சுகாதாரத் துறை மூலமாக 50 வீடுகளுக்கு ஒருவரை நியமித்து பிளச்சிங் பவுடர், புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி டீன், நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதர், துணை கண்காணிப்பாளர் குப்புராஜ் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் கந்தசாமி புறநோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் பிரிவு என ஒவ்வொரு பிரிவாக சென்று பார்வையிட்டார்.
அப்போது பணி நேரத்தில் டாக்டர்கள் அங்கு இல்லை. நோயாளிகளிடம் கேட்ட போது, “பணி நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என்றும், இரவு நேரத்திலும் டாக்டர்கள் இருப்பதில்லை என்றும் நர்சுகள் மட்டுமே உள்ளனர்” என்றனர்.
இது குறித்து கலெக்டர் கந்தசாமி, மருத்துவக் கல்லூரி டீன் நடராஜனிடம் கேட்டறிந்தார். மேலும், இனி பணி நேரத்தில் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Related Tags :
Next Story