‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூர், விருத்தாசலத்தில் அனைத்து கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மருத்துவப்படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்ய ‘நீட்’ தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இத்தேர்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., தி.மு.க. தீர்மானக்குழு செயலாளர் சபாபதிமோகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜயசுந்தரம், மாநில சொத்து மீட்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன், பால.அறவாழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் குளோப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக்தாவூது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ராஜா ரகிமுல்லா, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் ராஜவேல், நகர தலைவர் ரவி, செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் நடராஜன், துணை செயலாளர் அகஸ்டின், விஜயசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவ்சாத் அலி, வக்கீல் வனராஜ், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ரவிக்குமார், நகர தலைவர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், கடலூர் நகர செயலாளர் மு.செந்தில் உள்பட அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதே போல் விருத்தாசலம் பாலக்கரையில் தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நீதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, வக்கீல் அருள்குமார், வள்ளலார் குடில் இளையராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, தொகுதி செயலாளர் அய்யாயிரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முத்துவேல், அசோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுக்கூர், மனிதநேய மக்கள் கட்சி அசன்முகமது, பெருந்தலைவர் மக்கள் கட்சி குருசாமி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார். முன்னதாக அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story