ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் பெண்கள் உள்பட 470 பேர் கைது
புதுக்கோட்டையில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட 470 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த 7-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கத்தினர், வருவாய்த்துறை சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடத்தப்பட்ட அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் கருப்பையா, ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ராஜாங்கம், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, இணை செயலாளர் ராமநாதன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும் பேராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த 177 பெண்கள் உள்பட மொத்தம் 470 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story