கலெக்டர் அலுவலகங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் 387 பேர் கைது
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 387 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வரை 1-1-2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி உள்ள கார்டனில் (தோட்டம்) அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து விடக் கூடாது என்பதற்காக அந்த கார்டன் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 148 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலு வலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரியலூரிலும்...
இதேபோல் அரியலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசு ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபிகேசன் தலைமையில் நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய் வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அரியலூரில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 239 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 57 பேர் பெண்கள் ஆவர்.

Related Tags :
Next Story