பொதுக்குழுவை நாங்கள் விரைவில் கூட்டுவோம் சசிகலாவின் தம்பி திவாகரன் பேட்டி
பொதுக்குழுவை நாங்கள் விரைவில் கூட்டுவோம் என்று மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறினார்.
மன்னார்குடி,
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தங்களது இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியிருப்பதால் நாங்கள் இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த பொதுக்குழுவே செல்லாது என தீர்ப்பு வரும் பட்சத்தில் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது. பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழே மிக குழப்பமான மனநிலையில் தான் அனுப்பி உள்ளனர்.
ஊழல் செய்த அமைச்சர்கள் இல்லாத ஆட்சி தான் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்களை பார்த்து அச்சப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க(அம்மா) பொதுச் செயலாளராக சசிகலா தான் நீடிக்கிறார். உண்மையான தொண்டர்கள் சசிகலா பக்கமும், டி.டி.வி.தினகரன் பக்கமும் தான் உள்ளனர். சசிகலா அனுமதி பெற்று விரைவில் பொதுக்குழுவை முறைப்படி கூட்டுவோம்.
தற்போது தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடக்கிறது. ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டிய கவர்னர் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை. சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி தமிழக கவர்னருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்திருப்பது சரியான முடிவாக தான் இருக்கும். டி.டி.வி.தினகரன் நியமித்துள்ள நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாமல் அவர்கள் மீது எதிர்தரப்பினர் பொய் வழக்கு போடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போடும் வழக்கை சட்டப்படி நாங்கள் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் தனது மனைவியை பார்க்க விருப்பப்படுகிறார். இது குறித்த தகவலும், மருத்துவ அறிக்கையும் வக்கீல்கள் மூலம் சசிகலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள தனது கணவரை பார்க்க பரோல் கேட்டு விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story