தஞ்சையில் நாளை நடக்கிறது: அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு வைகோ பேசுகிறார்


தஞ்சையில் நாளை நடக்கிறது: அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு வைகோ பேசுகிறார்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:15 AM IST (Updated: 14 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நாளை ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறுகிறது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார்.

தஞ்சாவூர்,

ம.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழா மாநாடு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு வக்கீல் சின்னப்பா தலைமை தாங்குகிறார். மாநாட்டு அரங்கை ஆர்.எம்.சண்முகசுந்தரம் திறந்து வைக்கிறார். ம.தி.மு.க. நிர்வாகிகள் சந்திரசேகரன், சேரன், துரைராஜ், பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை.பால கிருஷ்ணன் வரவேற்கிறார். கொடியை என்ஜினீயர் ஈஸ்வரன் ஏற்றுகிறார். அண்ணா சுடரை ஆடுதுறை முருகன் ஏற்றுகிறார். மாநாட்டு தீர்மானங்களை வக்கீல் அந்திரிதாஸ் வாசிக்கிறார்.

வைகோ பேசுகிறார்

மாநாட்டில் வைகோ போராட்ட களங்கள் கண்காட்சியை புலவர் முருகேசன் திறந்து வைக்கிறார். மாநாட்டு தலைவரை வெல்லமண்டி சோமு முன்மொழிகிறார். மோகன் வழிமொழிகிறார். மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, கணேசமூர்த்தி, நாசரேத்துரை, மல்லைசத்யா, செஞ்சி மணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

மாநாட்டில் நிகழ்ச்சிகளை விடுதலைவேந்தன் தொகுத்து வழங்குகிறார். மதியம் 1.30 மணிக்கு நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

முடிவில் தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதய குமார் நன்றி கூறுகிறார். 

Related Tags :
Next Story