புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 47 பெண்கள் உள்பட 290 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்திட வேண்டும். அதுவரை இடைகால நிவாரணம் 20 சதவீதம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ரவி, ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சிவகுரு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வீரமணி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 47 பெண்கள் உள்பட 290 பேரை கைது செய்தனர். 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் அனைத்து துறைகளிலும் பணிகள் தேக்க நிலை அடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story