ஹைட்ரோ கார்பன் திட்ட கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து
நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோ கார்பன் திட்ட கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி கரும்புகை மண்டலமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வடகாடு,
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு மற்றும் கோட்டைக்காடு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக 156 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
நெடுவாசல், நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்கவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கச்சா எண்ணெய் போன்று திரவ நிலையில் கழிவுகள் நிரம்பும்.
இந்தநிலையில் நேற்று மாலை நல்லாண்டார்கொல்லையில் உள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ அந்த தொட்டி முழுவதும் மளமளவென பரவி எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமானது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மண்ணை கொட்டியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் முத்தலிப் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டதும், இதனால் அப்பகுதி புகை மண்டலமாக ஆனதும் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story