‘நீட்’ தேர்வு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கல்விக்கு எதிரான சதி டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வு, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கல்விக்கு எதிரான சதி என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
விழுப்புரம்,
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் சமூகநீதி மாநாடு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்காக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
30 ஆண்டுகளுக்கு முன்பு மிக, மிக பின்தங்கிய சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு தமிழகத்தில் 7 நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே போராட்டத்தில் பங்கேற்ற 21 வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். அந்த ஆண்டில் இருந்தே இந்நாளை தியாகிகள் நினைவு தினமாக கடைபிடித்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்திய வரலாற்றில் இந்த போராட்டம் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். அதற்கு முன்பும், பின்பும் இதுபோன்ற போராட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.
இந்த போராட்டத்தின் பயனாக 108 சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. அதுவரை பிற்படுத்தப்பட்ட பிரிவு என்ற ஒன்று மட்டும்தான் இருந்தது. இப்போராட்டத்திற்கு பிறகு மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற பிரிவை ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். இதன் மூலம் 108 மிக பின்தங்கிய சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் ஓரளவு பயன்பெற்று வருகின்றனர். ஆனாலும் முழுமையான சமூகநீதி கிடைக்கவில்லை.
பக்கத்து மாநிலங்களை பார்த்தால் போராட்டம் நடத்தாமலே, உயிரிழப்புகள் நடக்காமலே கேரளாவில் 10 தொகுப்புகளாக பிரித்தார்கள். கர்நாடகத்தில் 6 தொகுப்புகளாக பிரித்தார்கள். ஆந்திராவிலும் அப்படித்தான் பிரித்தார்கள். ஆனால் சமூக நீதியின் பிறப்பிடம் என்று சொல்லும் தமிழகத்தில் மட்டும் தொகுப்பு முறையில் பிரிக்காமல் போராட்டம் செய்து 21 உயிர்களை தியாகம் செய்த பிறகே மிக பிற்படுத்தப்பட்ட பிரிவு என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தையொட்டி அவர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகிற மாநாடாகவும், சமூகநீதி மாநாடாகவும் விழுப்புரத்தில் நடத்தப்படுகிறது. இது சமூகநீதி வரலாற்றில் பேசப்பட போகிற மாநாடாக திகழும். மாநாட்டிற்கு வருபவர்கள் அமைதியாக வந்து அமைதியாக திரும்பி செல்ல வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் ஏற்கனவே கட்சி சார்பில் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் இந்த மாநாடு நடைபெறும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரிடம் முறையிடுகிறார்கள், யாரை எதிர்த்து போராடுகிறார்கள் என்று பார்க்கும்போது தமிழகத்தில் அரசு என்று ஒன்று இல்லை, ஆட்சி என்று ஒன்று இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் போராடி நியாயம் பெறலாம். கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். அப்போதுள்ள அரசின் அணுகுமுறை வேறு வகையாக இருந்தது. இப்போதுள்ள அரசின் அலங்கோலங்களை பார்க்கும்போது அந்த கட்சிக்கு வாக்களித்த மக்களும் தலைகுனிகிறார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களும் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால் மெஜாரிட்டி இல்லாமல் ஒரு பினாமி அரசு நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கவர்னரை தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் சந்தித்தது இல்லை என்று சொல்கிற அளவிற்கு கவர்னரின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர், அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்ற தயங்குகிறார். கவர்னரை யாரோ இயக்குகிறார்கள்.
‘நீட்’ தேர்வை எதிர்த்து தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து இன்று வரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் போராடி வருகிறார். ‘நீட்’ தேர்வு, சமூகநீதி, தமிழ்நாட்டில் அலங்கோலமான ஆட்சி, மாநில சுயாட்சி இவற்றை பற்றியெல்லாம் அன்புமணி ராமதாஸ், இந்த மாநாட்டில் ஒரு சிறப்பான எழுச்சி உரையாற்ற இருக்கிறார்.
எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வு தேவை இல்லை. இதற்கு முன்பு நுழைவுத்தேர்வு என்று ஒன்று இருந்தபோது நான் சொன்னேன். இது கிராமப்புற ஏழை மாணவர்கள் நுழையாமல் இருப்பதற்கு நுழையா தேர்வு என்று கூறினேன். அதே போல் இப்போதும் கிராமப்புற ஏழை மாணவர்கள் நுழையாமல் இருக்கவும், மருத்துவ கல்வி பெறாமல் இருக்கவும் சதியும், சூழ்ச்சியும் செய்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.
எங்கள் நோக்கம் அ.தி.மு.க., தி.மு.க. இந்த 2 கட்சிகளோடு நாங்கள் எந்த காலத்திலும் சேருவதில்லை என்று ஏற்கனவே முடிவு எடுத்திருக்கிறோம். எதற்காகவும், எந்த கொள்கைக்காகவும் நாங்கள் அவர்களோடு சேரப்போவதில்லை. அவர்களது போராட்ட வழிமுறை வேறு, எங்களது போராட்ட வழிமுறை வேறு. எதுவாக இருந்தாலும் நாங்கள் தனியாகத்தான் போராடுவோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அப்போது பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் குரு, உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story