மலைப்பகுதியில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய மருதாநதி அணை
தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மருதாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை அமைந்துள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, பாச்சலுார், கடுகுதடி போன்ற மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்த அணைக்கு வருகிறது. இந்த அணை தண்ணீரின் மூலம் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகா பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதுதவிர பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாததால் அணையில் குறைந்தளவே தண்ணீர் இருந்தது. இதனால் விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
முழு கொள்ளளவை எட்டியது
இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. 72 அடி உயரம் கொண்ட அந்த அணையில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.
அணைக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. 170.5 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மருதாநதி அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையின் நிலவரத்தை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், அணை பொறியாளர் மோகன்தாஸ் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தண்ணீர் திறப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த அணையும் இதுவரை நிரம்பவில்லை. முதல் முதலாக மருதாநதி அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணை நிரம்பியுள்ளதால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து அணையின் செயற்பொறியாளர் குமார் கூறும்போது, ‘அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதையொட்டி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அணையை திறப்பதற்காக மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் முதல்போக சாகுபடிக்கு அணை திறக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்’ என்றார்.

Related Tags :
Next Story