கழிப்பறை இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் எச்சரிக்கை

கழிப்பறை இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2017 8:30 PM GMT (Updated: 23 Sep 2017 2:19 PM GMT)

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என ஆணையாளர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என ஆணையாளர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வீடுகளில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியன் பகுதிகளில் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

சாத்தான்குளம் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு, இந்த வட்டாரம் திறந்தவெளியில் மலம் கழித்தல் அல்லாத வட்டாரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபராதம்

எனவே கழிப்பறை இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தூய்மை தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பேப்பர் டம்ளர்களை சேகரித்து, துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக அவற்றை சாலையோரம் கொட்டினால், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். எனவே, இந்த யூனியனை முழு சுகாதாரமான யூனியனாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story