இரட்டை இலை சின்னத்தை மீட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு


இரட்டை இலை சின்னத்தை மீட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-24T01:05:40+05:30)

இரட்டை இலை சின்னத்தை மீட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

பொள்ளாச்சி,

கோவை புறநகர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க.சார்பில் மறைந்த முதல்–அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கோவை புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா வரவேற்று பேசினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆட்சியும், கட்சியும் 100 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் என்று ஜெயலலிதா கூறினார். அவரது தையரியம் கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து வழிநடத்தும். ஒரு சிலர் நம்மை கேலி, கிண்டல் செய்கிறார்கள். ஆகவே நாம் ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். சோர்ந்து போனவர்கள் எழுந்து, பயணிக்க தொடங்கினால் எதிரிகள் எல்லாம் வீழ்ந்து விடுவார்கள் என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்டு, வருகிற உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story