திருப்பூரில் இரவு நேரத்தில் குடிபோதையில் ரே‌ஷன் கடைக்குள் இருந்த ஊழியர் பணி இடை நீக்கம்


திருப்பூரில் இரவு நேரத்தில் குடிபோதையில் ரே‌ஷன் கடைக்குள் இருந்த ஊழியர் பணி இடை நீக்கம்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:15 PM GMT (Updated: 23 Sep 2017 8:21 PM GMT)

திருப்பூர் ஆ‌ஷர்நகரை அடுத்த பாரதிதாசன்நகரில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணராஜ்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் ஆ‌ஷர்நகரை அடுத்த பாரதிதாசன்நகரில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணராஜ். நேற்று முன்தினம் இரவு பணி நேரம் முடிந்தும் ரே‌ஷன் கடையை பூட்டி செல்லாமல் கிருஷ்ணராஜ் அங்கேயே இருந்தார். மேலும் அவரும் அதே பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரும் குடிபோதையில் ரே‌ஷன் கடையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் ரே‌ஷன் கடைக்குள் வைத்து வெளியே பூட்டினார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் கிருஷ்ணராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் குடிபோதையில் ரே‌ஷன் கடையில் இருந்ததாக கிருஷ்ணராஜை அதிகாரிகள் பணி இடை நீக்கம்செய்தனர். அவருக்கு பதிலாக அந்த ரே‌ஷன் கடைக்கு தியாகராஜன் என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story