இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு


இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 23 Sep 2017 10:00 PM GMT (Updated: 2017-09-24T02:09:45+05:30)

திருவள்ளூர் மாவட்டம் வெகல் அருகே உள்ள வெள்ளியூர் புதியகாலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). கூலித்தொழிலாளி.

பெரியபாளையம்,

இவரது மனைவி திருமலை என்கிற குட்டியம்மாள். இவர்களுக்கு சரண்ராஜ் என்ற மகனும், சரண்யா, சந்தியா என்ற மகள்களும் உள்ளனர்.

மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில், நேற்று சுப்பிரமணி ஆரணியில் உள்ள மகள் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஆரணி-பெரிய பாளையம் நெடுஞ்சாலை பெரியபாளையம் பஜார் வீதியில் வரும்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சுப்பிரமணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். சுப்பிரமணியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கையை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 56). இவர் ஆவடி நகராட்சியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அபிமன்னன் வேலையின் காரணமாக சைக்கிளில் வேப்பஞ்செட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் புதுமாவிலங்கை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அபிமன்னனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அபிமன்னன் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த புதுமாவிலங்கையை சேர்ந்த கவியரசன் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story