மத்திய-மாநில அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


மத்திய-மாநில அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2017 10:15 PM GMT (Updated: 23 Sep 2017 9:01 PM GMT)

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைப்பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உள்ளாட்சி, தன்னாட்சி, கூட்டுறவு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள புதிய சம்பளத்தை வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகை படியை காரைக்கால் பகுதி அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரி அரசுக்கு அளிக்கப்பட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர் எம்.எல்.ஜெய்சிங் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜார்ஜ், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சுப்ரமணியன், நகராட்சி மற்றும் கொம்யூ பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் காளிதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சம்மேளன துணை பொதுச்செயலாளர் கலைச்செல்வம் நன்றி கூறினார்.

Next Story