முதல்–மந்திரி பதவியில் இருந்து கொண்டு சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல


முதல்–மந்திரி பதவியில் இருந்து கொண்டு சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசுவது சரியல்ல
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 23 Sep 2017 10:17 PM GMT)

பெங்களூருவில் நேற்று மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

பெங்களூரு,

முதல்–மந்திரி பதவியில் இருந்து கொண்டு வாய்க்கு வந்ததை சித்தராமையா பேசுவது சரியல்ல என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

முதல்–மந்திரி சித்தராமையா, பா.ஜனதா தலைவர்களை மரியாதை குறைவாக பேசி வருகிறார். முதல்–மந்திரி பதவியில் இருந்து கொண்டு, அவர் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. பதவியில் இருப்பதால் அதிகார தோரணையில் சித்தராமையா பேசி வருகிறார். முதல்–மந்திரி பதவியில் இருந்து கொண்டு வாய்க்கு வந்ததை சித்தராமையா பேசுவது சரியல்ல. கட்சி தலைவர்கள் யாரையும் அவர் மதிப்பதில்லை. சமீப காலமாக அவர் பேசுவதில் எந்த ஒரு அர்த்தமும் இருப்பதில்லை.

சித்தராமையா பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. எதற்காக சித்தராமையா அப்படி பேசுகிறார் என்று நானே பலமுறை குழம்பி போய் இருக்கிறேன். ஒரு வேளை ஆட்சியை இழக்க போகிறோம் என்பதால், அந்த பயத்தில் அவ்வாறு சித்தராமையா பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அதனை அவரிடம் நீங்கள் (நிருபர்கள்) தான் கேட்க வேண்டும்.

எனது அரசியல் வாழ்க்கையில் முதல்–மந்திரி பதவியில் இருப்பவர்கள், மற்ற கட்சி தலைவர்களை மரியாதை குறைவாக பேசுவதை பார்த்ததில்லை. முதல்–மந்திரி பதவிக்கு என்று தனி மரியாதை உள்ளது. அதுபற்றி தெரியாமல் சித்தராமையா பேசி வருகிறார். அவரது பேச்சை நான் மட்டும் அல்ல, மாநிலத்தில் உள்ள சாதாரண மக்கள் கூட கண்டு கொள்வது கிடையாது.

ஆனாலும் ஒரு மாநில முதல்–மந்திரி என்பதாலும், அதிகாரத்தில் இருப்பதாலும் சித்தராமையா சொல்வதை மாநில மக்களும் வேறு வழியின்றி கேட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் சட்டசபை தேர்தலில் சித்தராமையாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.


Next Story