கல்வி நிறுவனங்கள் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கல்வி நிறுவனங்கள் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 24 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-25T02:30:47+05:30)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர்,

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியை லெனின் மார்க்சியா, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில், ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி, ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆதித்தனார் கல்வி நிறுவன அலுவலர்கள், கல்லூரிகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

Related Tags :
Next Story