சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து பெண் உள்பட 4 பேர் காயம்


சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து பெண் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:15 AM IST (Updated: 1 Oct 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி பஸ், காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் அருகே ஆண்டிப்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே மீன் லோடு ஏற்றி கொண்டு திருவாரூர் நோக்கி சென்ற சரக்கு வேன் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் வேனில் அமர்ந்திருந்த வடபாதிமங்கலத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 49), பரவாக்கோட்டையை சேர்ந்த ராமலிங்கம் (35), குடிதாங்கிச்சேரியை சேர்ந்த தேவேந்திரன் (35), நாகை அக்கரைப்பேட்டையை சேர்்ந்த வெள்ளம்மாள் (45) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் நாகை மாவட்டம் தரங்கம்பாடி எடக்குடியை சேர்ந்த மனோகரன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story