பஸ்- கார் பயங்கர மோதல்; மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் சாவு
தூத்துக்குடி அருகே பஸ்- கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
சென்னை கிண்டியைச் சேர்ந்தவர் ராஜாசிங் (53). இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் கிறிஸ்தவ ஆலய விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
பின்னர் விழாவை முடித்து விட்டு நேற்று ஊருக்கு திரும்பினர். அவர்கள் உடையார்குளத்தில் இருந்து ஒரு காரில் தூத்துக்குடிக்கு வந்து அங்கு இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று மாலையில் அவர்கள் சொந்த ஊரில் இருந்து ஒரு காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். காரில் டிரைவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் இருந்தனர்.
அவர்கள் வந்த கார் நேற்று இரவு 7.15 மணி அளவில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு மதிக்கெட்டான் ஓடை பாலம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது, எதிரே தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ராஜாசிங்கின் மனைவி ஏஞ்சலின் (50) மற்றும் கார் டிரைவர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். மற்றவர்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ராஜாசிங்கின் தாயார் ரத்தினாவதி (70) என்பவரும் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் காயம் அடைந்த ராஜாசிங், அவருடைய மகள் ஜெயா இவாஞ்சலின் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்ற 4 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியான ஏஞ்சலின், ரத்தினாவதி மற்றும் கார் டிரைவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story