கும்பகோணத்தில் ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி


கும்பகோணத்தில் ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 1 Oct 2017 4:00 AM IST (Updated: 1 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

திருவிடைமருதூர்,

கும்பகோணம் கோடையான்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது15). பாலமுருகன் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் பாலமுருகன் தனது நண்பர்களுடன் கும்பகோணம்

கோடையான் தோட்டம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றான். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென பாலமுருகன் மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் வீட்டுக்கு சென்று இது குறித்து பாலமுருகனின் உறவினர்களிடம் கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆற்றுக்கு சென்று பாத்த்தனர். ஆனால் பாலமுருகனை ஆற்றில் காணவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடினர். தீயணைப்பு வீரர்களின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் பாலமுருகனின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. பள்ளி மாணவன் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கும்பகோணம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Related Tags :
Next Story