திருச்சியில் உள்ள ஓட்டலில் வெடிகுண்டு வீசப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஓட்டலில் வெடிகுண்டு வீசப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே விடுதியுடன் கூடிய ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், ஓட்டல் முன் பகுதியில் வெடிகுண்டை வீசினர். அதன்பிறகு தாங்கள் அணிந்து வந்த முகமூடியை கழற்றி எறிந்து விட்டு தப்பி சென்றனர். வெடிகுண்டு வெடித்ததில் ஓட்டல் வரவேற்பறையின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
அப்போது பணியில் இருந்த ஓட்டல் மேலாளர் உடனடியாக உரிமையாளர் மகேஷுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டலில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் மகேஷ் கண்டோன்மெண்ட் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர், என் மூலமாக கே.கே.நகரை சேர்ந்த கருப்பையாவிடம் ரூ.14 கோடி கடனாக பெற்று இருந்தார். ராஜேசால், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் கொடைக்கானலில் இருந்த அவருக்கு சொந்தமான இடத்தை கடந்த 2014-ம் ஆண்டு கருப்பையாவுக்கு கொடுத்து கடனை சரி செய்து விட்டார். இந்தநிலையில் ரூ.14 கோடிக்கு ராஜேஷ் தர வேண்டிய வட்டி பணத்தை கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் கருப்பையா என்னை மிரட்டி வந்தார். நான் கருப்பையாவிடம் இருந்து ராஜேஷுக்கு பணம் வாங்கி கொடுத்தபோது, எனது பாதுகாப்புக்காக சில ஆவணங்களை ராஜேஷிடம் இருந்து வாங்கி வைத்து இருந்தேன்.
அந்த ஆவணங்களை கேட்டு திருச்சி வக்கீல் சங்க தலைவர் ராஜேந்திரகுமார் அடிக்கடி எனது ஓட்டலுக்கு வந்து மிரட்டினார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரகுமார் என்னை அழைத்ததின்பேரில் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு ராஜேஷும் உடன் இருந்தார்.
அப்போது ராஜேந்திரகுமார், என்னிடம் உள்ள ஆவணங்களை கொடுத்துவிட வேண்டும் என்றும், கருப்பையாவிடம் வாங்கிய கடனுக்கான வட்டி ரூ.4 கோடியை நீதான் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தை சுமுகமாக முடித்து தருவதற்கு எனக்கு ரூ.1½ கோடி தர வேண்டும் என்றார். ராஜேஷ் வாங்கிய கடனுக்கு நான் எப்படி வட்டி செலுத்த முடியும் என்று கூறினேன்.
அதற்கு நீ பணம் தரவில்லையென்றால் உன் ஓட்டலை தரைமட்டம் ஆக்கிவிடுவேன். அதற்கு எங்களிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று மிரட்டினார். இந்தநிலையில் என் ஓட்டல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி சென்று உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.
புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வக்கீல் ராஜேந்திரகுமார், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இது பற்றி அறிந்த வக்கீல்கள் சிலர் நேற்று முன்தினம் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ராஜேந்திரகுமாரை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story