மேல்பட்டி அருகே பாலாற்றில் வெள்ளம் வருவதை பார்க்க சென்ற மாணவி தவறி விழுந்து சாவு தாய் கண்முன்னே பரிதாபம்
மேல்பட்டி அருகே பாலாற்றில் வெள்ளம் வருவதை பார்க்க சென்ற மாணவி தாய் கண் முன்னே தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
அதேபோல் ஆந்திர மாநில பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேல்பட்டி அருகே குளிதிகை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 14). இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சுவேதா மற்றும் அவரது தாயார் அறிவுக்கொடி, அக்கா, அண்ணன், பெரியம்மா ஆகியோருடன் குளிதிகை பாலாற்றில் வெள்ளம் வருவதை வேடிக்கை பார்க்க சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குளிதிகை ஆற்றின் கரையோர பகுதியையொட்டி மணல் எடுப்பதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் சுவேதா தவறி விழுந்து மூச்சு திணறி தாயின் கண் எதிரே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மேல்பட்டி போலீசார் விரைந்து வந்து சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story