மு.க.ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் போல் பேசுகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


மு.க.ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் போல் பேசுகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2017 5:00 AM IST (Updated: 2 Oct 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் போல் பேசுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது.

அகில இந்திய அளவில் மதுரை மாநகரம் தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே மதுரை மாநகரத்தில் சுத்தம், சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டியது, அனைவரின் கடமையாகும்.

அ.தி.மு.க. ஆட்சி கலைய போவதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியால் கூட அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது. அப்படி இருக்கும்போது மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறுவது நகைச்சுவை நடிகர் பேசுவதுபோல் இருக்கிறது.

அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி உள்ளார். அப்படி இருக்கும்போது மு.க.ஸ்டாலினால் எப்படி முடியும். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story