மத்தியில் கூட்டணியில் இருந்தபோது தமிழக பிரச்சினைகள் எதையும் தி.மு.க. தீர்க்கவில்லை
மத்தியில் கூட்டணியில் இருந்தபோது தமிழக பிரச்சினைகள் எதையும் தி.மு.க. தீர்க்கவில்லை என்று தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.
சரவணம்பட்டி,
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று கார் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது. இதன்காரணமாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர் பிரசாரம் பொதுமக்கள் இடையே எடுபடவில்லை. எனவே மு.க.ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பேசி வருகிறார்.
தமிழகத்திற்கு நிலையான கவர்னர் வேண்டும் என்று வலியுறுத்தியது மு.க.ஸ்டாலின் தான். தற்போது கவர்னர் நியமனத்தை எதிர்ப்பதும் அவர் தான். அ.தி.மு.க. தான் உண்மையான திராவிட இயக்கம். இந்த இயக்கம்தான் தமிழர்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் போராடுகின்ற இயக்கமாக உள்ளது.
மக்களுக்கான இயக்கமாக அ.தி.மு.க. செயல்படும். இந்த இயக்கத்தை யாராலும் அளிக்கமுடியாது. அ.தி.மு.க. ஆட்சி மீதம் உள்ள 4 ஆண்டுகள் மட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும். அ.தி.மு.க. இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. 18 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழக பிரச்சினைகள் எதையும் தீர்க்க வில்லை.
தமிழகம் தற்போது சந்தித்து வரும் நீட் தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தி.மு.க.தான் காரணம். 2010-ம் ஆண்டு நீட் தேர்வு வந்தபோது மத்திய அரசை எதிர்த்து தி.மு.க.வினர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். தி.மு.க. மீது மக்கள் எப்போதும் கோபத்தில் தான் இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story