தூத்துக்குடியில் வியாபாரி வீட்டில் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் பழைய இரும்பு வியாபாரி வீட்டில் நகை, பொருட்களை கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஆசிரியர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் காசிராஜன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 42). இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 30-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு, வேப்பலோடையில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றாராம். நேற்று முன்தினம் காலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின்முன்பக்க கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
கொள்ளை
அங்கு இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த கம்மல், மோதிரம் உள்ளிட்ட 5 கிராம் தங்க நகைகளும், ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த லேப்டாப், எல்.இ.டி. கம்ப்யூட்டர் மானிட்டர், 2 செல்போன்கள் ஆகியவற்றையும் மர்ம ஆசாமி கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.28 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த பொருட் களை வீட்டில் இருந்து எடுத்த ஒரு சூட்கேசில் வைத்து அடைத்து கொண்டு சென்றதாக தெரிய வந்துள்ளது.
இது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story