திருத்துறைப்பூண்டி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி,
கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த கன்னியாகுமரியை சேர்ந்த உஷா (வயது 30), நிரோஷா (29), சத்தியா (17), சுரேஷ் (36), செல்வி (50), யுவன்ராஜ் (30), டிரைவர் ராஜேஷ் (28) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story