நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது: அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பென்னாகரம்,
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது. பின்னர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள், பார்வை கோபுரம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அருவிகளில் கொட்டும் தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர்.

Related Tags :
Next Story