பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்த வாலிபர் ராட்சத பள்ளம் தோண்டி உயிருடன் மீட்பு
அரக்கோணத்தில் பாதாள சாக்கடை பணியின் போது மண்ணில் புதைந்த வாலிபரை பொக்லைன் மூலம் ராட்சத பள்ளம் தோண்டி உயிருடன் மீட்டனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அரக்கோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் உள்ள தெருக்கள் சகதியாக காட்சி அளிக்கிறது. மழை, சகதியையும் பொருட்படுத்தாமல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
அரக்கோணம், சோமசுந்தரம் நகரில் கழிவுநீர் நீரேற்று தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் தொட்டிக்குள் செல்லும் வகையில் நீரேற்று தொட்டி அருகே ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.
நேற்று சோமசுந்தரம் நகர், 3-வது தெருவில் 13 அடியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பெரிய குழாய்கள் பதிக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது விழுப்புரத்தை சேர்ந்த சிவபுஷணம் என்ற சின்னதம்பி (வயது 30) என்பவர் பள்ளத்தில் இறங்கி பொக்லைன் எந்திரம் உதவியுடன் குழாய் பதிக்கும் பணி செய்து கொண்டு இருந்தார். திடீரென பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து பள்ளத்தின் உள்ளே நின்று கொண்டிருந்த சின்னதம்பி மீது விழுந்தது. இதில் அவர் மண்ணில் உயிருடன் புதைந்து விட்டார்.
இதை பார்த்த மற்ற தொழிலாளிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு கையால் மண்ணை வேகமாக 3 அடிக்கு மேல் தோண்டினர். சின்னதம்பியின் தலை தெரிந்த பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.
சத்தம் கேட்டு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக மண்ணை கொஞ்சம், கொஞ்சமாக அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சின்னதம்பி சிக்கிக் கொண்ட பகுதியில் பொக்லைன் எந்திர உதவியுடன் ராட்சத பள்ளம் தோண்டி சுமார் 2 மணி நேரம் போராடி மண்ணில் புதைந்த சின்னதம்பியை கயிறு கட்டி உயிருடன் மீட்டு வெளியே தூக்கி கொண்டு வந்தனர்.
பின்னர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல இளைஞர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சின்னதம்பிக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு தோளில் தூக்கி கொண்டு ஆட்டோவில் ஏற்றி செல்ல வந்தனர். ஆட்டோவும் வர காலதாமதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் கமலகுமாரி, உடனடியாக தனது காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி காரை அனுப்பி வைத்தார். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சின்னதம்பி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நகராட்சி மேலாளர் கோபிநாத், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story